Friday, May 31, 2013

வன்முறை என்பது வெளியில் மட்டும் இல்லை

வன்முறை என்பது வெளியில் மட்டும் இல்லை.அது ,ஒவ்வொரு மனிதனின் அடிஆழத்திலும் மறைந்து இருக்கிறது.குற்றம் என்பதாக சமூகம் சொல்கிரவற்றை செய்வதற்கு எல்லாருக்குள்ளும் சாத்தியம் இருக்கிறது.தைரியம் உள்ளவர்கள் செய்கிறார்கள் ;குற்றவாளிஆகிறார்கள் .

நாம் ஒரு விஷத்தை நிந்தனை செய்கிறோம் என்றால் ,நமது கற்பனை பிம்பத்தை யாரோ உடைக்க தயாராக இருக்கிறார்கள் அல்லது நாம் அந்த விஷத்தை விருபுகிறோம்;ஆனால் அது நம்மால் முடியாத...தை இருக்கிறது.

நாம் ஒருவனை திருடனாக எண்ணுவதே நாம் நம்முள் திருட்டுதனத்துடன் வாழ்வதால் தான் .இல்லை என்றால் ,அப்படி எண்ணுவது சாத்தியம் இல்லை.அவன் வெறுமனே அந்த பொருளை எடுபதாக தோன்றும்.அவன்/அவள் திருடனாக மாறியதற்கு நாமும் ஒரு காரணம் .

திருட்டு என்பதை குற்றம் என்று யார் வரையறை செய்கிறார்கள் ? இந்த சமூகத்தில் பெரிய திருட்டை சத்தமில்லாமல் செய்யும் செய்து கொண்டு இருக்கும் மனிதர்கள் தான்.

பெரிய திருடர்கள் (அரசர்கள்,பெரும் பணக்காரர்கள் ) தன்னை சுற்றி இருப்பவர்கள் தன்னிடமிருந்து எடுக்காமல் இருபதற்கு ,moral என்பதாக மற்றவர்களுக்கு சொல்கிறார்கள்.

பாலியல் தவறானது என்று சமூகம் போதிக்கிறது.அதை இயல்பானது என்று யாருமே எற்றுகொள்வதில்லை.சிறு குழந்தை முதலே ஒவ்வொரு குழந்தையும் அவர்களது பெற்றோரால் கண்டிக்க படிகிறார்கள் .அந்த பெற்றோர்களுக்கு தம் ஏன் அப்படி நடந்து கொள்கிறோம் என்று தெரிவதில்லை.அவர்கள் தங்கள் மதங்களில் சொள்ளபடுபவற்றை ,சமூகத்தில் பாரம்பரியத்தை காப்போர் என்று சொள்ளபடுகிரவர்களிடம்மிருந்து தெரிந்து கொள்கிறார்கள்.

அவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு அளித்தது அந்த செய்தியைத்தான் .விழிப்புணர்வு இல்லாமல் செய்யும் அவர்களது செயல்கள் சமூகத்தில் perversion -ஐ உருவாக்கி இருக்கிறது.

இதனால் ,மனிதர்கள் பிளவுபட்ட (Split Personality )மனதுடன் வாழ் நேருகிறது.இந்த மனிதர்கள் தாம் எந்தவிதமான முட்டாள் தனமான காரியங்களையும் செய்வதற்கு ஆயத்தமாய் இருக்கிறார்கள்.

சிறிதும் உணர்வே இல்லாமல் ,பல லட்சம் மனிதர்களை கொன்று குவிக்க முடிகிறது.போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளக்கபடுகிரார்கள்.அன்பு என்றால் என்ன என்று ஒரு துளியாவது தெரிந்த மனிதனால் பெண் மீது வன்முறை செலுத்துவது சாத்தியமான விசயமா? ஆனால்,நாம் பார்ப்பது என்ன? எங்கெங்கும் பெண் மீதான வன்முறை.அதிலும் மேலும் கீழிறங்கி ,குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை நிகழ்கிறது .

இந்த மனிதர்களை மனதளவில் நோயுற்ற வர்களாக இருக்கிறார்கள்.ஒரு மரத்தின் பழங்கள் விசமானதாக இருந்தால் அந்த மரத்தை நாம் குறை சொல்லி பயன் இல்லை.மாறாக ,நாம் இட்ட விதை விசதன்மையுடையதா என்று பார்க்க வேண்டும்.

வெறும் ,தண்டனை என்று மட்டும் பேசுவது ,சிந்திபபது எந்த ஒரு அடிப்படை மாற்றத்தையும் மனிதர்களிடம் கொண்டுவராது.

இயற்கையின் போக்கை இயல்பாக புரிந்து ,அதன் இயல்பே பாலுணர்வின் வெளிப்பாடாக இருப்பதை புரிந்துகொள்ளல் வேண்டும்.

மனிதன் பாலுணர்வு என்கிற ஒன்றின் தோன்றி உள்ளான் .பாலுணர்வு அருவருப்பானது என்றால் மனிதன் பாவியாவான்.மனிதன் பாவி என்றால்,அதை படைத்ததாக கருதப்படும் கடவுள் மிக பெரிய பாவியாவார்.

பாலுணர்வு ஆக்க சக்தி ;அது எதிர் பாலுடன் இயல்பாக வெளிப்படும் பொது அன்பாகவும்;புற பொருளில் வெளிப்படும் போது அது கலையாகவும்,தியானத்தில் வெளிப்படும் பொழுது ,அது தெய்வீக மாகவும் வெளிபடுகிறது.

மனிதன் மேல் நிலைக்கும் -கீழான நிலைக்கும் ஆன ஒரு பாலம் மட்டுமே;அவன் மேல் நிலை(அல்லது தெய்வீக நிலை) அல்லது கீழ்நிலைக்கு செல்வது அவனது இயற்கையின் மீதான புரிதலில்தான்.

வாய்மையே வெல்லும் ?

வாய்மையே வெல்லும் -என்பதற்கு அர்த்தம் உண்மையே வெல்லும் என்று அர்த்தம் அல்ல.வாய்மை வெல்ல வேண்டும் என்ற மனிதர்களின் தீராத வேட்கை.

எதார்த்தத்தில் ,வாய்மையை தவிர மற்ற எல்லாமும் வெற்றி பெறுகிறது.
பணம் ,அதிகாரம்,பேராசை - என எல்லாமும் !

வெற்றி என்ற ஒன்றிற்காக எதை வேண்டுமானாலும் ,என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற போதனையே பெற்றோர்களாலும் ,ஆசிரியர்களாலும்,சமூக மனிதர்களாலும் செய்ய படுகிறது

வெற்றி பெற்ற பிறகு ,எந்த வழியில் வெற்றி கிடைத்தது என்று யார் கவலை பட போகிறார்கள் ? புறவாசல் வழி ,குறுக்கு வழி என எதுவாகட்டும்.

Honest is Best Policy எதுவரைக்கும்? அது உபயோகமாக இருக்கும் வரைக்கும்;ஆதாயமாக இருக்கும் வரைக்கும்!
இல்லையெனில்,Dis -Honest is best Policy !

நேர்மையாக (Honest ) இருப்பது ,நேர்மையாக இருக்கவேண்டும் என்ற அதன் உள்ளார்ந்த அழகுக்காக இருபது தான் அழகு .அது,சொர்க்கத்தில் எதோ ஒரு இடம் கிடைக்கும் என்பதற்காக இருக்ககூடாது .

Wednesday, April 17, 2013

போரும் அதன் விதையும்.....



போர் (WAR ) என்ற வடிவம் மனித வரலாற்றில் எப்போதுமே இருக்கிறது...வன்முறை முதல் ஆரம்பம் எங்கே என்று பார்த்தால் ,மனிதனின் பயதில்ருந்து வருகிறது.தன்னுடையது (தன இனம்) தன்னுடையது இல்லாதது(வேறு இனம்)...

உருவாகும் திறன் தடுக்க படும்போது ,அழுகும் திறன் உருவாகிறது.

செக்ஸ் என்பது உருவாக்கும் தன்மை கொண்டது.வன்முறை என்பது அழிக்கும் தன்மை கொண்டது.

பாலியல் உணர்வு தடுக்கப்பட்ட மனிதன் அழிபதற்கு சித்தம் ஆகிறான்.

எல்லா நாடு ரானுவீர்களும் இதற்கு விதி விலக்கல்ல ..அதனால் தான்,போர் நடை பெரும் பொது ,வெற்றி பெறுகிற ராணுவம் ,அந்த நாட்டின் பெண்களை பாலியல் வன்முறை செய்வதும் ,அந்த நாடு ஆண்களை கொல்வதும் வழக்க மாக இருக்கிறது.போர் செய்வது அடுத்த நாட்டை வெற்றி பெறுவதற்காக என்றால் ,பாலியல் வன்முறை எங்கிருந்து வருகிறது?

அதே போல்,காதலில் இருக்கும் மனிதனை வன்முறைக்கு தூண்ட செய்ய ,வைக்க முடியாது.சந்தோசமாக இருக்கும் மனிதன் தன மீதோ ,பிறர் மீதோ வன்முறை செய்வது இல்லை.

மதவாதிகள் மனிதனின் பாலியல் சுதந்திரத்தை,இயல்பை பறித்து ,உளவிய ஆக்கிரமிப்பை செய்கிறார்கள் ;அரசியல் வாதிகள் மனிதனின் புற உலக சுதந்திரத்தை பறித்து அடிமையா ஆகுகிறார்கள்.

போருக்கு அடிப்படை - நாடு; நாட்டுக்கு அடிப்படை - குடும்பம்;குடுபத்திற்கு அடிப்படை விதிகள்;விதிகளை உருவாக்குவது மத வாதிகளும் அரசியல் வாதிகளும் !!

வாளினால் அடுத்தவரின் உடலை கிழிப்பது,இல்லை துப்பாக்கி வழியே அடுவரின் உடலை துளைப்பது -எல்லாமே மனிதனின் suppresed sex என்பதல்லாமல் வேறு என்ன?

செக்ஸ் ஆற்றல் அதன் இயல்பில் செல்லும் உயர்ந்த நிலையான அன்பாகவும் (Love );கீழ்நிலைஇல் அடக்கப்பட்டு வெளிப்படும்போது ,வன்முறையாகவும்(WAR ) வெளிபடுகிறது.

போரின் விதை அழிக்கப்படும் வரை மனித அழிவு என்கிற மரமும் இருக்கவே செய்யும்.

-அது இலங்கை யின் உள்நாட்டு போர் உட்பட !

Thursday, August 30, 2012

நாம் நிஜமாகவே வாழ்கிறோமா?


நமது வாழ்வை ஆழமாக்குவது நாம் நமக்காக வாழ்ந்த கணங்கள்தான்.

வாழ்வு என்பது வளர்வது;விரிவடைவது;பிரபஞ்சத்தை தொடுவது.
நாம் அப்படி தான் வாழ்கிறோமா?

நாம் ஒவ்வொரு  நாளையும் வெறுமனே கடக்க வேண்டும் என்ற நிலையில்தான் பெரும்பாலானோர் நினைகிறார்கள்;
வாழ்க்கை தவிர்க்கபடவேண்டியதர்க்கா ?

இதன் பெயர் வாழ்க்கையா?
வாழ்க்கைக்கு வேறு பரிணாமமே இல்லையா? இல்லை நமக்கு அது தெரியவில்லையா?

வாழ்வு ஒரு கொண்டட்டாமாக ,விழாவாக,பரிபூர்ண நிறைவாக,அன்பின் பொழிவாக அல்லவா இருக்கவேண்டும்;
இயற்கையில் எல்லா உயிரினங்களும் -மரங்கள்,மிருகங்கள்,பறவைகள்,என அனைத்தும் அறிந்து இருக்கிற ஒரு விஷயம் நாம் தெரிந்து இருபது இல்லை.
நாம் தவறான திசையை நோக்கி நடந்து கொண்டு இருகிறோமோ?

அதன் விளைவாய் ,எல்லா விதமான அவநம்பிக்கை,பயம்,திருப்தியற்ற தன்மை,அன்பில்லாதன்மை ...

நாம் உடலை நேசிப்பது இல்லை.உடலை இரு பிரிவாக -மேல் கீழ் என - உயந்தர்தது ,தாழ்ந்தது என பேதம் காட்டுகிறோம்.

உணவை ரசிப்பது தவறானது;சிரிப்பது அநாகரிகமானது;காமத்தை வெறுப்பது -என வாழ்வைப்பற்றி தவறான புரிதலோடு இருக்கும் பொது அன்பு எப்படி சாத்தியம்?


அன்பு உண்மையிலே நமிடம் இருக்கிறதா? அன்பின் பெயரால் வேறு என்நேனாவோ இருக்கிறது.அன்பை மட்டும் காணோம்.
நிபந்தனையில் தான் நமது அன்பு என்ற ஒன்று இருக்கிறது;
நிபந்தனை என்பது வியாபாரம்;அன்பாக இருக்கமுடியாது;


நமிடம் எது இல்லையோ ,அது இல்லை என எற்றுகொல்லும்போதுதான் அது உண்மையிலே வளருவதற்கு சாத்தியம் இருக்கிறது;

நமிடம் இல்லாத அன்பு இருப்பதாக பிரமையில் வாழும் போது  வாழ்வின் கடைசி நொடி வரை அதை அறியாமலே போய்  விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.

அன்பு வாழ்வின் நறுமணம்;அது காமம் என்ற வேரில் இருந்துதான் உருமாற்றம் அடைந்து வளரமுடியும்...;

காமம் கண்டனம்  செய்யபடுகின்ற வரை ,அன்பு வளர்வதற்கான  சாத்தியம் இல்லாமலே  போய் விடுகிறது.

















Sunday, August 26, 2012

"லஞ்சம்" - அதிகாரம் பணத்தின் வழியில்...செயல்படுவது !

"லஞ்சம்" - அதிகாரம் பணத்தின் வழியில்...செயல்படுவது !

அடுத்தவர் லஞ்சம் கேட்கும்போது கசப்பாக இருபது,நாம் அதையே லஞ்சமாக பெறும் பொது இனிப்பாகவே இருக்கிறது .


லட்சியம்- லஞ்சத்தின் தோற்றுவாய்..லட்சியம் என்பது நான் ஒன்றை அடைய விரும்புவது.நாம் என்னவாக இல்லையோ அதிலிருந்து என்னவாக ஆகவேண்டுமோ அது லட்சியம்.

...தாம் சொல்லுகின்ற விஷயத்தை பின்பற்றினால் ,பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பாராட்டு லஞ்சம் தருகிறார்கள்.

ஆசிரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் லஞ்சம் தருகிறார்கள்.

நேர்மையை பற்றி யாருக்கு அக்கறை? அது வெறும் பாட புத்தகத்திற்கு மட்டுமே.பின்பற்றுவதற்கு அல்ல.

ஆசையை நிறைவேற்றுகிற கடவுளுக்கு ,காணிக்கை லஞ்சம்.பெரும்பாலான கடவுள்கள் லஞ்சம் வாங்கிகொண்டு காரியை நிறைவேற்றுகிறார்கள்.நிறைவேற்றாத கடவுள்களின் கோயில் அனாதையாக விடபடுகிறது.

மனிதனின் பேராசையை நிறைவேற்றுவதற்கு தான் கடவுள்.தங்கள் பேராசையை தங்கள் வழியிலே நிறைவேற்ற தெரிந்தவர்கள் கடவுளின் உதவியை நாடுவதில்லை .


ஆசை ,பேராசை இரண்டுமே ஒன்றுதான்.

தேவை என்பது இயல்பானது.ஆசை என்பது இயல்பற்றது.

இயற்கை தேவைகளை நிறைவேற்றுகிறது;
ஆசை இயற்கையால் நிறைவேற்ற முடியாதது.
முழுமையால் முடியாதது பகுதியினாலும் சாத்தியம் இல்லாதது.

எல்லோரும் லஞ்சத்தை உள்ளூர விரும்பி கொண்டும்,அதையே வாழ்க்கை முறையாக கொண்டும் இருந்து கொண்டு,வெளிஉலக லஞ்சதத்தை வெருகிரார்கள்


தன சுயத்தை,தேவையை அறியாத எவரும் -லட்சியம் ,லஞ்சம் என்பதை நோக்கி ஓடவே செய்வார்கள்.

சந்தோசம் வெளியிலுருந்து வருகின்ற ஒன்று என்று நாம் நினைக்கும் வரை வெளிப்பக்கம் மட்டுமே ஓடவே செய்வோம்.

நமுடைய சந்தோசத்திற்கு உறவுகள்,நண்பர்கள் ஒரு சாக்கு தான்.சந்தோசம் என்பது நம் இயல்பு நிலை.

லஞ்சம் என்பது வேலையில் இருக்கிற விஷயம் இல்லை;அது நம்முள் இருக்கிறது!!!

Thursday, August 23, 2012

அஹிம்சையும் ஒரு ஹிம்சையே...

அஹிம்சையும் ஒரு ஹிம்சையே...


நான் ஒருவனை உணவிடாமல் சில நாட்கள் பட்டினி போட்டால் ,அது அவனை துன்புறுத்துவது.-ஹிம்சை.

ஆனால்,நான் என்னை பட்டினி போட்டு துன்புறுத்தினால் அதன் பெயர் விரதம்?

ஒருவன் மற்றவனை அடித்து துன்புறுத்தும் போது,நான் ஒதுங்கி நின்றால் அது அஹிம்சை என்று சொல்ல படுகிறது.வன்முறையை-ஹிம்சையை ஆதரிப்பதும் ஒரு ஹிம்சையே.அது அஹிம்சையாகாது.


நான் அடுத்தவனை துன்புறுத்துவதும் ஹிம்சை.அடுத்தவன்,என்னை துன்புறுத்த அனுமதிப்பதும் ஹிம்சை.

நான் அடுத்தவனை துன்புறுத்தாமலும் ,அடுத்தவன் என்னை துன்புறுத்த அனுமதிக்காமலும் இருத்தலே சரியானது.

சிகரட் பிடிப்பது கெட்ட பழக்கமும் இல்லை;நல்ல பழக்கமும் இல்லை.

சிகரட் பிடிப்பது கெட்ட பழக்கமும் இல்லை;நல்ல பழக்கமும் இல்லை.

அது மனோ வய அடிமைத்தனம் .எல்லோரும் ஒவ்வொரு அடிமைதனதிருக்கு ஆட்பட்டவர்கள் தன.சிலருக்கு மது,சிகரட்,பலருக்கு கடவுள்,வழிபாடு,அதிகாரம்,பணம்,பாலியல் ...

உடலுக்கு பதிப்பு என்பது சிகரட் மீதான தெரிந்த பரவலான விஷயம்.
ஆனால்,அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.

சிகரட் மீதான ஈடுபாடு என்பது...

வாழ்வின் மீது ஈடுபாடு இல்லை என்பது தான்.

வாழ்வில் வாழ்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை என்பது தான்.

வாழ்வு ஒரு சுமையாக தெரிவதால் தான்,

சந்தோசத்தின் தரிசனம் எங்கேயும் தெரியாததால் தான்.
இரண்டு பட்ட வாழ்வை வாழ நேருவதால் தான்-நான் விரும்பிற ஒன்று;மற்றவர்களால் திணிக்கப்பட்ட ஒன்று.

ஒருவருடைய தனித்தன்மையையும் மற்றவர்கள் மதிக்காததால் தான்.

சுதந்தரத்தின் அர்த்தமே என்ன என்று தெரியாத தால்தான்.
உருவாக்கும் கலையை அறியாதாதால் தான்.

நமது கண்ணுக்கு தெரிகிற பழக்கங்களின் தோற்றுவாய் கண்ணுக்கு தெரியாத காரணங்கள்தான்.வேரை புரிந்து கொள்ளாதவரை ,மரத்தை அழிப்பது இயலாத காரியம்.

வாழ்வை உண்மையில் வாழ்கிற ,கொண்டாடுகிற மனிதனுக்கு -முட்டாள்தனமான செயலில் ஈடுபாடு இயலாத விஷயம்.

இல்லையென்றால்,அசுத்தமான புகையை (காற்றை) உள்ளேயும் வெளியேயும் புகைப்பது எப்படி புத்திசாலிதனமான காரியாமாக இருக்கமுடியும்,?